ஈ.பி.டி.பி வேட்பாளரை ஆதரித்து உடுத்துறையில் பரப்புரை கூட்டம்!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளரும், ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரனை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் இன்று (02.11.2024) வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இடம்பெற்றது

உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் முற்பகல் 11.00 மணியளவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,:முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா,

அண்மையில் ஜனாதிபதி அனுரவை சந்தித்த போது கடற்றொழில் அமைச்சராக  இருந்த காலத்தில் செய்த விடயங்களையும், செய்யவேண்டி இருந்த விடயங்களையும் எடுத்துக் கூறியபோது அதற்கு அவர் பச்சைக் கொடி காட்டினார்

அவர் விடாப்பிடியாக இல்லாமல் விட்டுக் கொடுத்து போக கூடியவராக உள்ளார்.காரணம் தேர்தல் முடிந்தவுடன் வாருங்கள் கலந்தாலோசித்து செய்வோமென ஜனாதிபதி கூறினார்.

வடமராட்சி கிழக்கிற்கு எமது பிரச்சார அணி சென்றபோது ஒரு சில கிராமத்தில் எமது பிள்ளைகளை தூசண வார்த்தை கொண்டு திட்டினார்கள்.காரணம் அவர்களது சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு நான் அனுமதியளிக்கவில்லை என்பதால்

என்னை பொறுத்தவரை அரசியலுக்கு அப்பால் எது சரி,எது நடைமுறை சாத்தியம் என்பதில்தான் எனது நடைமுறை இருக்குமே தவிர சுயலாப அரசியலுக்காக விட்டுக் கொடுத்து போவதற்கு நான் தயார் இல்லை 

நான் தனியாக நாடாளுமன்றம் செல்வதால் என்னால் ஒருவனால் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது  முடியாது.என்னுடைய இலக்கு நான்கில் இருந்து ஐந்து ஆசனங்கள் 

இலங்கையின் பத்து மாவட்டங்களில் போட்டியிடுகிறோம். ஆனால் எல்லா மாவட்டங்களிலும் நாம்வெல்ல மாட்டோம். வடக்கில் வெற்றிபெறுவதற்கு சாத்தியம் உண்டு 

எமக்கு நான்கு, ஐந்து ஆசனங்கள் கிடைக்குமாக இருந்தால் இரண்டு வருடங்களுக்குள் மக்களின் கணிசமான பிரச்சினைகளை தீர்ப்போம்.ஆகவே தமிழ் மக்கள் இந்த முறை ஈழமக்கள் ஜனநாயக கட்சியை முழுவதுமாக ஆதரித்து அமோக வெற்றியடைய செய்யவேண்டுமெனவும் தெரிவித்தார்

இந்த பரப்புரை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான ஐயாத்துரை சிறிரங்கேஷ்வரன்,செலஷ்டின்,உடுத்துறை கடற்றொழிலாளர் சங்க தலைவர்,வத்திராயன் கடற்றொழிலாளர் சங்க தலைவர்,வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்,கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *