யாழ். சத்திரச்சந்திப் பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் சத்திரச்சந்திப் பகுதியில் இன்று (03) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மேலும்,  இவ் விபத்துதுக் குறித்து தெரியவருவதாவது,  துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்த நபர் கீழே வீழ்ந்த  நிலையில், வீதியால் வந்த வவுசர் ஒன்று அவரது காலின் மேல் ஏறி காற் பகுதி தசையில்  கடுமையான பாதிப்பு ஏற்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.

 மேலும், சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் வந்து விசாரணைகளை விசாரணைகளை மேற்கொண்டதுடன் படுகாயம் அடைந்த நபரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பொலிசார் விபத்துத் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply