பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (08) மாலை 4:00 மணி முதல் நாளை மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும்.

பதுளை, கண்டி, கேகாலை, குருணாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply