திருகோணமலை மாவட்டத்தில் சர்வஜன அதிகாரத்தில் போட்டியிட்ட, இரு வேட்பாளர்கள், போட்டியிலிருந்து விலகி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளனர்.
மூதூர் பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த குணசேகரம் மயிலன் மற்றும் திருகோணமலை பூபாலன் இராஜேந்திரன் ஆகிய வேட்பாளர்களே போட்டியிலிருந்து விலகி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைப்பதற்கு தீர்மானித்துள்ளனர் .
இது தொடர்பாக, திருகோணமலை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் காரியாலயத்தில் இன்று(8) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.