முள்ளியவளையில் வீட்டு கூரைக்கு மேல் முறிந்து விழுந்த மரம் -மயிரிழையில் உயிர்தப்பிய குடும்பம்!

முள்ளியவளை பகுதியில் மரம் முறிந்து வீட்டு கூரைக்கு மேல்  விழுந்ததால்  வீட்டு மேற்பக்க கூரை  முற்றாக சேதமடைந்த  சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம் பெற்றுள்ளது.

காற்றுடன்  கூடிய பலத்த  மழை பெய்துவரும் நிலையில்  கரைதுறைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட முள்ளியவளை   1ம் வட்டாரம் கிராமத்தில்  உள்ள  வீடொன்றின் மீது  உறங்கி கொண்டிருந்தபோது இன்றையதினம் அதிகாலை வீட்டின் அருகில் இருந்த பெரிய புளிய மரம் முறித்து  விழுந்துள்ளது. அதனையடுத்து  வீட்டின் மேற்பக்க கூரை  முற்றுமுழுதாக சேதம் அடைந்துள்ளது.

குறித்த சம்பவத்தின் போது  வீட்டிலிருந்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தனர். எவ்வித  உயிர் சேதமும் ஏற்படிருக்கவில்லை.

Leave a Reply