சற்று குறைந்த ரூபாவின் பெறுமதி!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (டிசம்பர் 16) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 285.99 ரூபாவாகவும், 294.56 ரூபாவாகவும் உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (13) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 285.92 ரூபாவாகவும், 294.49 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி இன்று சரிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *