கசகஸ்தானில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை; புதிய விமான சேவை ஆரம்பம்

சோவியத் ரஷ்ய கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றான கஸகஸ்தானில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்காக புதிய விமான சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், கசகஸ்தானின் அல்மாட்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய முதலாவது விமானம் நேற்று (18) மாலை இலங்கையை வந்தடைந்தது.

கசகஸ்தானின் தேசிய விமான நிறுவனமான அல் அஸ்தானா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான KC167 இலக்கம் கொண்ட குறித்த விமானத்தில் 150 பயணிகளும் 8 பணியாளர்களும் வருகை தந்துள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் வாரத்தின் முதல் 4 நாட்கள் கசகஸ்தான் விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *