முன்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு வேலைத்திட்டத்தினூடாக ஒரு பிள்ளைக்கு வழங்கப்படும் 60 ரூபாவை 100 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எடை குறைந்த பிள்ளைகள் அதிகமாகவுள்ள முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்களால் முன்பள்ளிப் பிள்ளைகளுக்கான காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது ஒரு பிள்ளைக்கு நாளொன்றுக்கு 60 ரூபா வழங்கப்படுவதுடன், 2025 ஆம் ஆண்டில் 155,000 பிள்ளைகள் பயனடையவுள்ளனர்.
சமகாலத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையால், ஒரு பிள்ளைக்கு நாளொன்றுக்கு ஒதுக்கப்படுகின்ற 60 ரூபா தொகை போதுமானதாக இன்மையால், குறித்த தொகையை 100 ரூபாவாக ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.