முப்படைகளின் வசமுள்ள காணிகள் தொடர்பான கலந்துரையாடல்!

காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் எற்பாட்டில், வட மாகாணத்தில் முப்படைகளின் வசம் உள்ள பொது மக்கள் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துறையாடல் இன்று யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி தலைவர் ச.சதுன் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் மூலோபாய திட்டத்தினை உருவாக்கும் நோக்கில் முப்படைகளின் வசமுள்ள பொது மக்களது காணிகள் விடுவித்தல் வேண்டும்.

வடமாகாணத்தில் பாதுகாப்பு படைப்பிரிவில் உள்ள பொதுமக்களின் காணிகளின்  தரவுகள் பட்டியல் மற்றும் பாதுகாப்பு படைப்பிரிவில் இல்லாத காணிகளை தரவுகளை தரப்படுத்தல் வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கம் வந்துள்ளது. அதில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியினால் முன்னெடுக்கப்பட செயற்பாடுகள், வடக்கு – கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படைப்பிரிவின் காணி சுபீகரிப்பு, பெளத்தமாயமாக்கல் தொடர்பாக ஜனாதிபதியுடன் கதைப்பதற்கு விஷேட கலந்துரையாடல் வேண்டும்.

சிங்கள மாயமாக்கல், தொல்பொருள் அகழ்வு, பெளத்த மயமாக்கல், காணி அதிகாரத்தினை மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்க வேண்டும். மதங்களால் உள்ள முரண்பாடுகள் ஆக்கிரப்பு, இனங்களுக்கிடையில் பிரச்சனை, வனவிலங்கு  அரச திணைக்களங்கள் மக்களின்  காணி ஆக்கிரப்பு தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் போன்ற விடையங்கள் பற்றி தெளிவூட்டப்டடன.

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம், கிளிநொச்சி, மூல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் காணிகளை கொண்டுள்ள மக்கள் தமது காணி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கோரிக்கையினை முன்வைத்தனர்.

இதில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ப.பிரியங்கர, சிவில் – சமூக செயற்பட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் பங்கெடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *