ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு கூட்டம்!

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு இன்று கொழும்பில் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையில் கூடியது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் தேர்தல்களுக்கு முகம் கொடுத்திருந்தது.

இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் முருகேசு பரணிதரன், தவிசாளர் ஜெயபாலன், நிதி செயலாளர் கணேசன், இணை உப தலைவர் சசிகுமார், நிர்வாக செயலாளர் பிரியாணி உட்பட கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, களுத்துறை, மாத்தளை, ஆகிய மாவட்ட அமைப்பாளர்கள், பிரதிநிதிகள் அடங்கிய அரசியல் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதில் நடைபெற்ற தேர்தல்கள், நாடு முழுவதும் கட்சியின் வியூகங்கள் தொடர்பாகவும் இங்கு கலந்து உரையாடப்பட்டிருந்தது

பல சவால்களுக்கு மத்தியிலும் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றுக் கொண்டமை தொடர்பாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல்களில் போட்டியிடவுள்ள திட்டங்கள் பற்றியும் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் பல சாத்தியங்கள் ஆராயபட்டன.

ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியாக மின்சூழ் (டோர்ச்லைற்) சின்னத்தில் அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் களம் இறங்குவது என்ற பல சாத்திய, சாதக பாதகங்கள் ஆராயபட்டன.

இதேவளை கட்சியின் சர்வதேச தொடர்பாடல்கள் விவகார உப தலைவராக பாரத் அருள்சாமி, கட்சியின் பிரச்சார செயலாளராக ARV லோஷன், உதவி செயலாளராக பாலசுரேஷ் குமார் ஆகியோர், தலைவர் மனோ கணேசன் அவர்களினால் பிரேரிக்கபட்டு அரசியல் குழுவினால் ஏகமனதாக ஆமோதிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

மேலும்  ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அரசியல் குழு கூட்டத்தை அடுத்து எதிர்வரும், வாரங்களில் அனைத்து மாவட்ட அரசியல் குழு கூட்டங்களும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *