மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு நேற்று (25) நள்ளிரவு தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.
இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது.
மேலும், கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.