யாழில் இடம்பெற்ற கோமாதா உற்சவ பவனி; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!

தைத்திருநாளுக்கு மறுநாளான இன்றையதினம் பட்டிப்பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக கோமாதா உற்சவம் இன்று யாழ்ப்பாணம் அன்னசத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இதன்போது, அன்னசத்திரத்து ஞான வைரவருக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, கோ பூஜை, கோபவனி, பட்டிப்பொங்கல், கோமாதா கீர்த்தனைகள் என்பன இடம்பெற்றன.

அங்கிருந்து கோபவனியானது ஆரம்பமாகி யாழ்ப்பாணம் பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலைய வீதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதி, கே.கே.ஏஸ் வீதியூடாக மீண்டும் ஆலயத்தினை சென்றடைந்தது.

ஆலய பிரதம குரு ஸ்ரீகந்தராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து கொண்டார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய ம.ரஜீவன், ப.இளங்குமரன், யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், சமயத் தலைவர்கள், வியாபார ஸ்தாபன உரிமையாளர்கள், சமயப் பெரியோர்கள், மாணவர்கள் பலரும்  கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *