
இலங்கையில் நவீன இருதய அறுவை சிகிச்சைத் துறையில் ஆற்றிய அளப்பரிய சேவைக்காக மர்ஹூம் டாக்டர் வை. கே.எம் லாஹி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பத்தரமுல்லை, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் ஆரம்பமாகிய இலங்கை இருதய மற்றும் மார்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புலமைத்துவ அமர்வின் போது(Academic session) அதன் தலைவர் டாக்டர் முதித்த சன்சக்காரவினால் இந்த அதி உயர் விருது அவருக்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

