அவுஸ்திரேலியா தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான வோர்ன் – முரளி டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

18 பேர் கொண்ட இந்த அணியின் தலைவராக தனஞ்சய டிசில்வா பெயரிடப்பட்டுள்ளார்.

இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகும்.

இரண்டாவது போட்டியானது பெப்ரவரி 06 ஆம் திகதி ஆரம்பமாகும்.

இலங்கை அணி விபரம்:

தனஞ்சய டிசில்வா (தலைவர்), பத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மெத்தியூஸ், கமிந்து மெண்டீஸ், குசல் மெண்டீஸ், ஓசத பெர்னாண்டோ, லஹிரு உதான, சந்தீர சமரவிக்ரம, சோனல் தினுஷ, பிரபாத் ஜயசூரிய, ஜெப்ரி வெண்டர்சே, நிஷான் பீரிஸ், மிலான் ரத்நாயக்க, அஷித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *