
போரினால் அழிவடைந்துள்ள காஸா பிராந்தியத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என அறிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காஸாவில் வாழும் மக்கள் வேறு நாடுகளில் குடியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹுவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிடுகையிலேயே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

