
இலங்கையில் பொதுவான திருமண வயதெல்லையை நிர்ணயிப்பது தொடர்பில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ள விவகாரம் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் இதுபற்றிய கதையாடல்கள் பல்வேறு தளங்களிலும் இடம்பிடித்துள்ளன. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவியும் அமைச்சருமான சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் கடந்த வாரம் கூடியபோது, இலங்கையில் திருமண வயது எல்லையை திருத்துவது தொடர்பாக அவர் தனது யோசனையை முன்வைத்துள்ளார்.