
சுதந்திர பலஸ்தீன அரசிற்கான தனது ஆதரவை சவூதி அரேபியா மீண்டும் வலியுறுத்தியதுடன், கிழக்கு ஜெரூசலத்தைத் தலைநகராகக் கொண்ட அத்தகைய அரசை உருவாக்கும் வரை இஸ்ரேலுடன் எந்தவித இராஜதந்திர உறவுகள் இருக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா காஸா பகுதியை கைப்பற்றும் என்று அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் சவூதி அரேபியாவின் அறிக்கை வந்துள்ளது.

