
‘இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்’ என்ற வாசகம் எல்லா இடங்களிலும் ஒலிப்பது வழமை. எனினும், நாளைய தலைவர்களாக இன்றைய இளைஞர்ளை மாற்றுவதற்கு தேவையான எந்தவொரு நடவடிக்கைளும் நமது சமூகத்தில் போதுமானளவு முன்னெடுக்கப்படுவதில்லை என்பது பெருங்குறைபாடாகும். எமது நாட்டிலும் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது. இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு அரசியல் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் குறிப்பிட்டதொரு சதவீதம் வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

