
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவராக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் கட்சியின் செயலாளராக கலீலுர் ரஹ்மான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கொழும்பில் கூடிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போதே இந்த வருடத்துக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றுள்ளது. அதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கான அங்கீகாரம் நேற்று மருதானையில் உள்ள குப்பியாவத்தை சனசமூக மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மாநாட்டில் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.

