
தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் நீண்ட காலமாகக் காணப்பட்டு வருகின்ற இடப்பற்றாக்குறை பிரச்சினை இன்று பூதாகரமாக மாறியுள்ளது. இப்பாடசாலையின் மாணவர்கள் கல்வி கற்பதற்கான அடிப்படை வசதிகளின்றி தவிக்கின்றனர். 1952 ஆம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே செயற்பட்டு வருகின்றது.

