
நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களும் வக்பு சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட வேண்டும். இதன் ஊடாக பள்ளிவாசல்களுக்குத் தேவையான சட்ட அங்கீகாரம் கிடைக்கின்றது. பள்ளிவாசல்களை பதிவுசெய்கின்ற சமயத்தில் அதன் நிர்வாக சபை உறுப்பினர்களினால் இந்த சட்டத்திற்கு வழங்கப்படுகின்ற முக்கியத்துவம், பதிவுசெய்யப்பட்ட பின்னர் வழங்கப்படுவதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். இதனால் நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் பாரிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இதற்கு பிரதான காரணம் வக்பு சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளாகும்.