
நல்லமல்கள் செய்ய ரமழான் நல்லதொரு பருவகாலமாகும். மற்றைய காலங்களைவிட ரமழான் காலத்தில் பொதுமக்கள் மார்க்க விடயங்களில் அக்கறை காட்டுவார்கள். உலமாக்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அதிகபட்சம் அவர்களை நெறிப்படுத்தி அதிகம் அமல் செய்பவர்களாக அவர்களை மாற்ற திடசங்கற்பம் பூணவேண்டும். அதேபோல் பயான்கள் செய்ய ரமழானில் சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன. தராவிஹுக்குப் பிறகு, இப்தார் வேளைகள், ளுஹருக்கு பிறகு என்று இவற்றைப் பட்டியல்படுத்தலாம்.