ஒஸ்கார் 2025: சிறந்த துணை நடிகையாக zoe saldana தெரிவு

2025 ஆம் ஆண்டின் சிறந்த துணை நடிகைக்கான ஒஸ்கார் விருதினை சோய் சல்டானா (zoe saldana)  தட்டிச் சென்றுள்ளார்.

2025 ஆம் ஆண்டிற்கான 97வது ஒஸ்கர் விருது விழா  அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எமிலியா பெரெஸில் (Emilia Pérez)  நடித்ததற்காக, சோய் சல்டானாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான ஒஸ்கார் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

ஜாக்ஸ் ஆடியார்டின்  (Jacques Audiard ) இயக்கத்தில் உருவான இந்த கிரைம் திரைப்படத்தில் உயர் அதிகாரம் கொண்ட பாதுகாப்பு சட்டத்தரணியாக சோய் சல்டானா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *