
புனித ரமழான் பாவமீட்சி பெற்று பரிசுத்தமடைவதற்காக அல்லாஹ் அளித்த அருட் கொடையாகும். பதினொரு மாதங்கள் செய்த பாவங்களை போக்க ரமழானில் நோன்பு நோற்று, தறாவீஹ் தொழுது ஏனைய அபரிமிதமான அமல்களைச் செய்து இறை அருளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமாகும். பகலிலே நோன்பு நோற்று இரவிலே நின்று வணங்குவதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார். அதன்படி பகலிலே பசியோடும் தாகத்தோடும் அல்லாஹ்வுக்காக பொறுமையுடன் நோன்பு நோற்க வேண்டும்.

