
கடந்த ஒரு தசாப்த காலமாக காலத்திற்குக் காலம் ஏதோ ஒரு காரணம் சொல்லப்பட்டு முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். அந்தத் தொடரில் தான் இந்தப் படு மோசமான ஜனாஸா எரிப்புச் செயலும் அரங்கேற்றப்பட்டது. இலங்கையில் COVID-19 நோய்த் தொற்று காலத்தில், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கட்டாயமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கை மிகுந்த சர்ச்சைகளையும், மன உளைச்சலையும் முஸ்லிம்களுக்கு உருவாக்கியது.