
கொவிட்-19 நோயால் உயிரிழந்தோருக்கு மரியாதையான அடக்கும் உரிமையை மறுத்தமைக்காக, விசாரணை நடத்தி நீதியினை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்த அறிவிப்பின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. கொவிட்-19 காரணமாக இலங்கையில் கட்டாயமாக எரிக்கப்பட்ட முதல் முஸ்லிம் நீர்கொழும்பைச் சேர்ந்த முகம்மது ஜமால் ஆவார். 2020 மார்ச் 30ஆம் திகதி அவர் உயிரிழந்தார். மார்ச் 27ஆம் திகதி வெளியான அறிவுறுத்தல்களின் படி புதைப்பதற்கு அனுமதி இருந்த போதிலும், அவரது குடும்பத்தின் சம்மதமின்றியே சடலம் எரிக்கப்பட்டது.