கொன்கொகவ் சம்பியன் கிண்ண தொடரின் காலிறுதிப்போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இன்டர் மயாமி மற்றும் லொஸ்ஏஞ்சல்ஸ் எப்சி அணிகளுக்கிடையிலான 2nd LEG காலிறுதிப்போட்டிகளாக இது நடைபெற்றது.
ஏற்கனவே இரு அணிகளுக்குமிடையிலான 1ST LEG காலிறுதிப் போட்டியில் 1-0 என லொஸ்ஏஞ்சல்ஸ் அணி வெற்றிப்பெற்று இன்டர் மயாமி அணிக்கு அதிர்ச்சியளிதிருந்தார்கள்.
இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் மீண்டும் இண்டர் மயாமி அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வண்ணம் லொஸ்ஏஞ்சல்ஸ் அணி 9வது நிமிடத்திலேயே ஆரோன் லோங்கின் உதவியுடன் தனது முதல் கோலினை பதிவு செய்து அசத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்க இண்டர் மயாமி அணி தொடர் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் 35வது நிமிடத்தில் அணித்தலைவரும் நம்பிக்கை நட்சத்திரமுமான லியானோல் மெஸ்ஸி தனது ஸ்டைலில் கோலொன்றினை பதிவு செய்து 1-1 என சமப்படுத்தி அசத்தினார்.
முதல் பாதி 1-1 என சமநிலையில் நிறைவடைந்த நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. இதில் இன்டர் மயாமி அணியின் ஆதிக்ம் தொடர்ந்தது. 61வது நிமிடத்தில் பெட்ரிகோ ரெடோன்டோ 2-1 என இண்டர் மயாமி அணியை முன்னிலைப்படுத்தி அசத்தினார்.
இதனால் ஒட்டுமொத்த போட்டிகளின் அடிப்படையில் 2-2 என போட்டி சமநிலையை எட்டியது. இந்நிலையில் லொஸ்ஏஞ்சல்ஸ் செய்த தவறு இண்டர் மயாமி அணிக்கு சாதகமாக அமைய 84வது வது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி சிறப்பாக பயன்படுத்தி தனது அணியின் வெற்றிக்கோலினை அடித்து அசத்தினார்.
இதனால் 3-1 என இரண்டாவது காலிறுதிப்போட்டியில் இன்டர் மயாமி வெற்றிப்பெற்றதோடு 3-2 என ஒட்டுமொத்த கோல்களின் அடிப்படையில் வெற்றியை பதிவு செய்து அரையிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்று அசத்தியது.