நுவரெலியாவில் பெய்துவரும் கனமழை – துயரத்தில் மக்கள்

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்தது வருகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

சிவனடி பாதமலைக்கு செல்லும் சாலையில் மலை உச்சியில் இருந்து மழை நீர் படிக்கட்டுகளில் அதிகளவில் வடிந்து செல்கின்றது

இதனால்  சிவனடி பாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்கள்பெரும்  சிரமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர் 

மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பண்ணையாளர்கள் மிகவும் பாதிக்கப்ட்டுள்ளனர்

பெருந்தோட்ட தொழிலாளர் தங்கள் மாதாந்த வேதனம் பெரும் நாளான இன்று கன மழை பெய்தது வருவதால் துயரடைந்துள்தாக தெரிவிக்கின்றனர்

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதை காண கூடியதாக உள்ளது.

குறிப்பாக விமலசுரேந்திர கென்யோன் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல காசல்ரீ மவுசாகல மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *