அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை செலுத்த இலகு வழி; மே மாதம் நடைமுறைக்கு

 

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் திட்டம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த தினத்திலிருந்து அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது டெபிட் அல்லது கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

touch and go முறை அல்லது insert முறையைப் பயன்படுத்தி சுமார் 8 வினாடிகளில் இதனை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக அமைச்சர் கூறினார்.

கொட்டாவை மற்றும் கடவத்தை சந்திப்புகளில் இது ஏற்கனவே ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *