உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவதே சமூகமயப்பட்ட அரசியலுக்கு அடித்தளம் அமைக்கும்! – சிறீதரன் எம்.பி!

அரசியற் தளத்தின் அடிப்படை அலகுகளாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களை வென்றெடுப்பதன் மூலமே, எமது மக்களின் அடிப்படை வாழ்வியலையும், அது சார்ந்த அபிவிருத்திச் செயற்பாடுகளையும் கட்டமைக்க முடியும். 

அத்தகைய சமூகமயப்பட்ட அரசியலுக்கு அடித்தளம் அமைக்கக்கூடிய உள்ளூராட்சி மன்றங்களை இம்முறையும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றுவதற்கான ஆணையை எமது மக்கள் வழங்குவார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில், கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட அக்கராயன் வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, கட்சியின் வட்டாரக்கிளைத் தலைவர் சுந்தரலிங்கம் கயூரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிறீதரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அக்கராயன் பிரதேச ஆதரவாளர்கள் பலரின் பங்கேற்போடு நடைபெற்ற மேற்படி கூட்டத்தில், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளரும் வேட்பாளருமான அருணாசலம் வேழமாலிகிதன், சபையின் மேனாள் உறுப்பினரான சுந்தரமூர்த்தி தயாபரன், கட்சியின் அக்கராயன் வட்டார வேட்பாளர் தட்சணாமூர்த்தி முரளி, வன்னேரிக்குளம் வட்டார வேட்பாளர் நாகேந்திரம் செல்வநாயகம், கணேசபுரம் வட்டார வேட்பாளர் யோகேஸ்வரன் நிரோயன், அக்கராயன் வட்டாரக்கிளை உறுப்பினர் உஷா சதீஸ்குமார், வட்டாரக்கிளையின் செயலாளர் மருதலிங்கம் யூட் அன்ரனி உள்ளிட்டோர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *