
மொஹம்மட் லியாஉத்தீன் மொஹம்மட் ருஷ்தி. நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 22 வயது இளைஞன். கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சிட்டி சென்டர் எனும் பிரபல வர்த்தக கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள ஸ்பா சலூன் எனும் வர்த்தக நிலையத்தில் சேவையாற்றிய குறித்த இளைஞனை கடந்த மார்ச் 22 ஆம் திகதி அந்த வர்த்தக நிலையத்துக்குள் வைத்து கைது செய்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு, 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்த பின்னர் எந்த குற்றச் சாட்டும் சுமத்தாமல் விடுவித்துள்ளது.