
“அமைச்சரவையில் மன்னிப்பு பத்திரமொன்றை சமர்ப்பித்துவிட்டு பலவந்த ஜனாஸா எரிப்புக் குற்றத்தினை ஒருபோதும் மறைக்க முடியாது” என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரிவித்தார். குறித்த பத்திரத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பகி ரங்க மன்னிப்பின் ஊடாக பலவந்த ஜனாஸா எரிப்பு அநியாயத்திலிருந்து எவராலும் தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.