காணாமல் போன இளைஞன் இரத்தக்கறைகளுடன் மீட்பு! கொலை எனச் சந்தேகம் வவுனியாவில் தொடரும் மர்மம்

வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப்பகுதியில் இருந்து இரத்தக்கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உலுக்குளம் பொலிசார் இன்று மீட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைபகுதியில் சடலம் ஒன்று உள்ளதாக உலுக்குளம் பொலிசாருக்கு பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

 வவுனியா விநாயகபுரத்தை சேர்ந்த 33 வயதுடைய கோபிதாசன் என்பவரே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

மேலும், அவர் கடந்த 13ஆம் திகதியில் இருந்து காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்படுகின்றது. 

மீட்கப்பட்ட சடலத்தில் இரத்தக்கறைகள் படிந்துள்ள நிலையில் பல்வேறு கோணங்களில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *