
புனித ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக இலங்கையிலிருந்து இந்த வருடம் செல்லவுள்ள ஹாஜிகளுக்காக மினாவில் ஒதுக்கப்பட்டுள்ள ‘பீ வலயத்தில்’ ஒரு ஹாஜி தங்குவதற்காக 1,195.45 சவூதி ரியால் செலுத்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது. இக்கட்டணம் ஹஜ் முகவர் நிறுவனங்களினால் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் இன்றைய இலங்கைப் பெறுமதி 95,650 ரூபாவாகும். புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இலங்கை ஹாஜிகள் சுமார் ஐந்து நாட்கள் மினாவில் தங்குவது வழமையாகும்.

