IPL 2025: குஜராத் அணியில் இணைந்த ‘தசுன் ஷானக‘

நடை பெற்றுவரும் IPL  தொடரில்,  குஜராத் டைட்டன்ஸ் அணியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்­னணி துடுப்பாட்ட வீரரான  ‘தசுன் ஷானக இடம் பிடித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரபாடா, கிளென் பிலிப்ஸ், ரூதர்போர்ட், பட்லர், கரிம் ஜனத்,  கோயட்சீ, ரஷித் கான் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய ரபாடா, சொந்த காரணத்திற்கான உடனடியாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார். அவர் எப்போது அணிக்கு திரும்புவார் எனக் கூறப்படவில்லை.

இதற்கிடையே, நியூசிலாந்தைச் சேர்ந்த கிளென் பிலிப்ஸ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார் என்றும், தொடர் முழுவதும் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரு முன்னணி வீரர்கள் விலகியது குஜராத் அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குஜராத் அணியில் காயம் காரணமாக விலகிய  நியூசிலாந்தின் கிளென் பிலிப்சுக்கு பதிலாக இலங்கை கிரிக்கெட் அணியின் சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ரான ‘தசுன் ஷானக  அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குஜராத் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடம் வகிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply