
பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில சரத்துகள் தற்போது திருத்தப்படுவதாக அரசு கூறி வரும் நிலையில், சரத்து திரத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் இன்று தெரிவித்திருந்தார்.
ஐநா அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில், அரசாங்கம் தற்காலிக ஏற்பாடான பயங்கரவாத தடை சட்டத்தின் திருத்த சட்ட மூலத்தை அண்மையில் சமர்பித்திருந்தது.
இதற்கு எதிராக பல்வேறு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களின் விசாரணை அடிப்படையில் உயர் நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு தற்போது அனுப்பியுள்ளது.
இந்த விடயத்தை இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில் வாசித்த சபாநாயகர் ,குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு விரோதமானது என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்திருப்பதாக தெரிவித்தார்.
எனவே இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.





