
நாட்டில் மீண்டும் மழை பெய்யும் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
நாளை முதல் இரண்டு மணித்தியாலங்களுக்குள் மின்வெட்டு காலம் குறையும் என ஆணைக்குழுவின் தலைவரான ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேவையான எரிபொருள் இருப்புக்களை வழங்கினால் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் நிலக்கரி இருப்பு குறித்து எந்த கவலையும் இல்லை. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதில்லை எனவும், மின்வெட்டு அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் கோரிக்கைகளை மாத்திரமே ஆணைக்குழு அங்கீகரிப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மின்வெட்டு PUCSL ஆல் விதிக்கப்படுகிறது என்ற எண்ணத்தில் சில பிரிவுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்வெட்டு விதிப்புக்கு ஆணையம் எதிரானது என்றும், நாளாந்தம் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு ஆதரவாக உள்ளது.
ஆணைக்குழு தீர்மானங்களை எட்டினாலும் அது இலங்கை மின்சார சபை வழங்கிய காரணிகள் மற்றும் தரவுகளின் அடிப்படையிலானது எனவும் அவர் தெரிவித்தார்.
மின்சார உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நீர் பற்றாக்குறையே மின்வெட்டுகளை அமுல்படுத்துவதற்கான கோரிக்கைகளின் பின்னணியில் உள்ள காரணங்களாக இலங்கை மின்சார சபை மேற்கோள் காட்டியதுடன், PUCSL அதற்கேற்ப அனுமதி வழங்குகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





