
நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் தற்போது காணப்படும் நிலையில்,இந்த அரசு சாராய பார்களுக்கு அனுமதிகளை வழங்கியுள்ளது என எதிர்க்கட்சி எம்பியொருவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய அமர்வில் எதிர்க்கட்சி நாடளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கருத்து தெரிவிக்கையில்,
இதுவரை சுமார் 40 பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் ,இவ்வாறு பார்களை அதிகம் நடத்துபவர்கள் அரசின் பங்காளிகள்.
இது தவிர இங்கே உள்ள பல எம்.பிகளுக்கு பார் உண்டு.சாராயம் விற்பதற்கே இவர்களுக்கு நேரம் சரியாயிகிவிடும் போல.பலர் வரி செலுத்தாமல் பார்களை நடத்துகின்றனர்.
இதனால் எமக்கு தான் வருமானம் இழப்பு .இதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றார்.





