செல்பி எடுக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

மரத்தில் ஏறி செல்பி எடுக்க முயன்ற சிறுவன் ஒருவர் தவறி ஆற்றில் விழுந்து காணாமல் போயுள்ளார்.

இப்பலோகம பகுதியில் உள்ள ஜயா ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி செல்பி எடுக்க முயன்ற சிறுவன் ஒருவரே கால் தவறி ஆற்றில் விழுந்துள்ளார்.

ஆற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பலோகம பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

நேற்று மாலை காணாமல்போன சிறுவன் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply