
ராஜபக்ஸ ஆட்சியில் தாமரை மொட்டு, வாசம் வீசும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இப்போது மொட்டு நாற்றம் வீச ஆரம்பித்து விட்டது என இன்றைய சபை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இந்த அரசு பயந்து விட்டது. அதுதான் ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகம் மீது முட்டை வீசி தாக்குதல் நடாத்துகின்றனர். இது அரசின் ஆதரவுடன் நடைபெற்றது.
இப்படியான கீழ்த்தனமான வேலையை செய்யாதீர்கள். நீங்கள் உடைக்கும் கண்ணாடிகள் உங்களை கண்டிப்பாக மீண்டும் குற்றும்.
மக்களை அடக்கி அவர்களிடையே பயத்தை ஏற்படுத்த பார்க்கிறீர்கள். உங்கள் ஆட்சியில் தாமரை மொட்டு வாசம் வீசும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இப்போது மொட்டு நாற்றம் வீச ஆரம்பித்து விட்டது. மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றார்.





