கல்முனையில் கோர விபத்து: தெய்வாதீனமாக உயிர் தப்பிய முச்சக்கர வண்டி சாரதி

அக்கறைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற பாரிய விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

அட்டாளைச்சேனை – மீனோடக்கட்டுக்கும் பாலமுனைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இவ்விபத்து இன்று 2:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது

அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி, மாட்டுடன் மோதியதுடன், எதிராக வந்த கனரக வாகனத்திலும் மோதுண்டதால் ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதத்துக்குள்ளானதுடன், சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரனையை அக்கறைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply