
பருத்தித்துறை யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையானது தேசிய பாடசாலையாக மாணவர்களுக்கு உரித்தாக்கும் நிகழ்வு இன்று இடம்பெறுள்ளது.
அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைவாக ஆயிரம் தேசிய பாடசாலைகள் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்
குறித்த நிகழ்வு இன்று காலை 11:00 மணியளவில், பாடாசாலை மாநாட்டு மண்டபத்தில் பாடசாலை அதிபர் பாலராணி சிறிதரன் தலமையில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து விழா மண்படபம் வரை அழைத்து வரப்பட்டு, மங்கள விளக்குகளை இந்து, கிறிஸ்தவ குருமுதல்வர்கள், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மீன்பிடி அமைச்சர் கே என் டக்ளஸ் தேவாநந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதி கு. சிவராம் , ஆளுநரின் பிரதிநி பாடாசாலை அதிபர் உட்பட்ட பிரதம அதிதிகள் ஏற்றி வைத்தனர்.
இதனை தொடர்ந்து இந்து, கிறிஸ்தவ மத குருமார்களின் ஆசி உரைகள் இடம் பெற்றதுடன் மாணவர்களின் வரவேற்பு நடனமும் இடம் பெற்றது.
தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் இணையவளி நிகழ்வுகள் இடம் பெற்றன.
இதில் கல்வி அமைச்சர் தினேஸ் குணவரத்தன மற்றும் கல்வி அமைச்சு அதிகாரிகள் பலரும் உரை நிகழ்த்தினர்.
தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சு அதிகாரியால் தேசிய பாடசாலையாக. மாற்றுவதற்க்கான சான்றிதழ் கடற்றொழில் அமைச்சர் கே என் டக்ளஸ் தேவாநந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதனை கடற்றொழில் அமைச்சர் பாடசாலை அதிபர் பாலராணி சிறிதரனிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி அமைச்சர் கே. என் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதி கு சிவராமன், மாவட்ட செயலர் க.மகேசன், வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர், மற்றும் அதிகாரிகள், பருத்தித்துறை பிரதேச செயலர் திரு சிறி, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.ச.அரியகுமார், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இருதயராஜ்.பாடசாலை சமூகம்,நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொணடனர்.





