பூநகரி பிரதேசத்தில் இரகசிய ஆய்வுகள்! – சபையில் சிறிதரன் எம்.பி சுட்டிக்காட்டு

கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேசத்தில் இரகசிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

ஒரு இடத்தில ஆய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றால் முதலில் பிரதேச செயலர், மாவட்டச் செயலர், பிரதேச மக்கள், பிரதேச சமூக மட்ட அமைப்புக்களுக்கு அறிவிக்க வேண்டும். ஆனால் யார், எவர், எதுக்கு என்று தெரியாமலே இரகசிய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வேரவில், வலைப்பாடு, கிராஞ்சி, பாலாவி, பொன்னாவெளி உள்ளிட்ட பிரதேசங்களில் ஒரு ஆய்வு நடைபெற்று வருகிறது.

அந்த இடத்தில் விவசாயம், கடல் தொழில், தென்னை செய்கை என மக்கள் வாழ்க்கையை நடாத்தி வருகின்றனர்.இ ந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் மூன்று பெரிய வாகனங்களை அங்கே நிறுத்தி இரவு பகலாக ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

அங்கே என்ன நடைபெறுகிறது என்று பிரதேச செயலர், உட்பட யாருக்கும் தெரியாது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். உங்கள் எண்ணத்துக்கு மக்களின் குடியிருப்பு பிரதேசங்களில் நீங்கள் விளையாட வேண்டாம்.

2016, 2017 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இதே போன்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அன்று மண் வளத்தை ஆய்வு செய்கின்றோம் என்றனர். மக்களின் எதிர்ப்பால் அன்று கைவிடப்பட்ட ஆய்வுகள் இன்று மீண்டும் நடைபெறுகிறது என்றால் இதுக்கு யார் காரணம். – என்றார்.

Leave a Reply