அம்பாறையில் மகளிர் தின கறுப்புதின போராட்டம்

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினமான இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மகளிர்தின கறுப்புதின போராட்டமாக இது முன்னெடுக்கப்பட்ட நிலையில், தாகம் என்றும் அடங்காது, எம் பிள்ளைகள் வரும் வரை போராட்டம் ஓயாது, பாதகனே என் கணவர் எங்கே போன்ற வாசங்கங்களை ஏந்தியவாறும், தலையிலும், கைகளிலும் கறுப்பு பட்டி அணிந்தவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply