
இலத்திரனியல் பொருட்களின் தொழில்நுட்ப ஈர்ப்பு சக்தி பற்றி மாணவர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்ற பொழுது அவர்கள் சொல்கின்ற அனுபவக் கூற்றுக்களை நாம் அவதானிக்கலாம். “ஸ்மார்ட் தொலைபேசி எனது கையில் இருந்தால் 24 மணித்தியாலங்கள் வேண்டுமானாலும் நான் அதனை பயன்படுத்திக் கொண்டிருப்பேன். எனக்கு எந்த வகையிலும் அலுப்பு தட்டாது.” “மெசஞ்சரில் (Messenger) எனக்கு வந்த ஒரு சிறிய செய்தியை பார்வையிட வேண்டும் என்ற நோக்கத்தில் தொலைபேசியை கையில் எடுத்த நான், பல மணி நேரங்களாக அதனை வைக்க முடியாமல், என்னை அறியாமலேயே பயன்படுத்திக் கொண்டிருந்தேன். குறுஞ்செய்திகளை பார்பதற்கு அப்பால் பல இணையத்தளங்கள் என்னை அழைத்துக் கொண்டன.

