
வவுனியாவில் சர்வதேச மகளிர் தினத்தில் சமூகப் பெண்மணியின் சேவையைப் பாராட்டி தமிழ் விருட்சம் சமூக அமைப்பு மற்றும் அன்பாலயாவுடன் இணைந்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சாந்தசோலையில் பொலிஸ் குழு சனசமூக நிலையத்தில் உறுப்பினராகவும் மாதர் அபிவிருத்திச்சங்கத்தை கடந்த 1996 ஆம் ஆண்டு உருவாக்கி அன்றிலிருந்து இன்று வரையிலும் அதனூடாக ஆற்றிவரும் சமூக சேவை மற்றும் நுண்நிதி நிறுவனங்களை கிராமத்திற்குள் செல்வதற்கு தடை ஏற்படுத்தி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தியதை கௌரவிக்கும் முகமாக நேற்றையதினம் திருமதி செல்வராசா பவனாதேவி கௌரவிக்கப்பட்டார்.





