
ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினர் கூட தேசிய அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என எதிர்கட்சி தலைவர் சஜிம் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
செய்தி இணையத்தளமொன்றிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் எவரும் அரசியல் தற்கொலையில் ஈடுபடப்போவதில்லை. இதனால் நாங்கள் யாரும் தேசிய அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என்பது உறுதியான விடயம்.
இதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக தெரிவிப்பது கட்டுக்கதை. இந்தியா தொடர்ச்சியாக என்னுடன் தொடர்பில் உள்ளது. அவர்கள் இதனை செய்யமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளது.





