ஒட்டமாவடி பிரதேச சபையின் கீழ் உள்ள மஜ்மாநகரில் கொவிட் -19 சடலங்களை அடக்கும் பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக covid-19 தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை மட்டக்களப்பு ஓட்டமாவடி மஜ்மாநகர் பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு வந்தன. இருந்தாலும், இப்பொழுது அரசாங்கம் எடுத்திருக்கும் மாற்று நடவடிக்கையின் பயனாக மஜ் மாநகரில் சடலங்களை அடக்கம் செய்வதை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்படுகிறது.
covid-19 தொற்றினால் மரணித்தவர்கள் சடலங்கள் ( இஸ்லாம், இந்து,கிறிஸ்தவ பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்களின் சடலங்கள் ) மஜ் மாநகரில் நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் 2021 ஆம் ஆண்டு மார்ச் 5ம்திகதி வழங்கியிருந்தது.
இதற்கமைய,கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ் மாநகரில் 05.03.2022 வரைக்கும் 3634 பேரின் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ எம் தெரிவித்திருக்கின்றார்.
கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை தத்தமது பிரதேசங்களில் நல்லடக்கம் செய்யலாமெ என்று அனுமதி வழங்கப்பட்டதற்கமைவாக, ஓட்டமாவடியில் அடக்கம் செய்யும் பணியை நிறுத்திக் கொள்வதாக ஓட்டமாவடி பிரதேச சபை அறிவித்திருக்கிறது.
இது தொடர்பான விசேட நிகழ்வு மஜ்மா நகர் மையவாடிக்கருகில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டிருக்கிறது. இதன்போது, கொவிட் மரணத்தினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு ஒத்துழைத்த ஜனாதிபதி, பிரதமர், இராணுவத் தளபதி உட்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. விசேட துஆ பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.






