
ரஸ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் 32375 ரஸ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அடுத்தபடியாக 29514 இந்திய பிரஜைகளும், 20744 பிரித்தானிய பிரஜைகளும் இலங்கை வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரையில் 204345 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 25511 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.





