விரைவில் டிஜிட்டல் மயமாகும் இலங்கை – நாமல் தெரிவிப்பு

இன்றைய சபை அமர்வில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது நிலவும் சிக்கல் நிலைகளை தொடர்ச்சியாக வைத்திருக்க நாம் விரும்பவில்லை. விரைவில் இவை தீர்க்கப்பட்டு மக்களுக்கு விரைவான சேவைகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

முதலில் அடையாள அட்டைகளை டிஜிற்றல் மயமாக்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த அரச அலுவலங்களை இவ்வாறு மாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு, ஹம்பகா மாவட்டத்தில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தவிர பாடசாலைகளில் அதிவேக இணைய வசதி, இ – வகுப்பறை ஆகிய திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக 10 ஆயிரம் பாடசாலைகள் இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன என்றார்.

Leave a Reply